SIDEBAR
»
S
I
D
E
B
A
R
«
ஆறு அறிவு கொண்ட மனிதர்களுக்கு
March 30th, 2009 by chittoor Murugeshan

ஆறு அறிவு கொண்ட மனிதர்களுக்கு
ஐந்தறிவு கொண்ட மிருகங்களின் விண்ணப்பம் !
ஆறு அறிவு கொண்ட மனிதர்களே !
காடுகளில் வாழ்ந்தீர். நாடோடிகளாய் திரிந்தீர். பின்பு பண்பாடு கற்றீர். நாகரீகம் வளர்த்தீர். நகரங்களை உருவாக்கினீர். இருந்தும் என்ன ஆடு,மாடு,கோழி,மீன்,மான்களாகிய எம்மை கொன்று தின்னும் காட்டுமிராண்டித்தனத்தை மட்டும் கைவிடவில்லை. எங்களில் அதிகபட்சம் சாகபட்சிணிகளே ! புல் பூண்டுகளை தின்று வளர்ந்த எம் உடல்களை உண்பதை காட்டிலும் இயற்கையாய் வளரும் பயிர் பச்சைகளை உண்பது அறிவுடைமை என்பதை உணர்வீர்.எங்களில் அதிக சக்திவாய்ந்த யானை சாக பட்சிணி தான். உங்களில் யாரேனும் இயற்கையாய் மரணமடைந்தாலும் ஆயிரம் சடங்குகள் செய்து மண் மாதாவின் மடியில் சேர்க்கின்றீர். எம்மை மட்டும் கொன்று உம் வயிற்றில் புதைப்பது என்ன நியாயம்? இயற்கையில் பருப்பு வகைகளில் கிடைக்கும் புரதத்தை (ப்ரோட்டீன்) விட்டு எம்மை கொன்று கொன்ற கணம் முதலே அழுக ஆரம்பித்துவிடும் எம் உடலை தின்று நோய்வாய்ப்படுகின்றீர். மனித குலத்திற்கே தலையாயதான கருணை,இரக்கம் உள்ளிட்ட மென்மையான குணங்களை இழந்து கோபம்,தாபம் வளர்த்து குற்றங்களுக்கும் துணிகின்றீர். மிருகக்காட்சி சாலையில் கவனியுங்கள். சாகப்பட்சிணிகள் யாவும் அமைதியாக இருக்கும். மாமிசப்பட்சிணிகளோ அலைபாய்ந்தவண்ணமே இருக்கும். வாழ்வாதாரமான தண்ணீரை உறிஞ்சி குடிக்கும் யோகம் சாகப்பட்சிணிகளுக்கு மட்டுமே உண்டு. மாமிச பட்சிணிகள் நக்கித்தான் குடிக்கும். இது இறைவன் ஏற்பாடு. முன்னொரு காலத்தில் மனித உடல் பெற்றிருந்து, மாமிசம் உண்டதால் இப்பிறவியில் மிருக உடல் தாங்கி கருமம் தொலைக்க வந்தோம். எம்மை கொன்று தின்று எம் கருமங்களை நீங்கள் சுமப்பது நல்லதா? சிந்திப்பீர் ! செயல்படுவீர் !
நம் எண்ணங்களுக்கேற்ப உடலிலான சுரப்பிகளின் செயல்பாடும்,சுரப்பும் மாறும். எம்மை கொல்ல நீங்கள் கத்தியை தீட்டும்போதே எம் உடலிலான சுரப்பிகள் கேடு விளைவிக்கும் அமிலங்களை சுரந்துவிடுகின்றன. மெட்டபாலிசமே மாறிவிடுகிறது. இவ்வாறாய் அமிலம் கலந்த எம் உடலை நாற்றம் தெரியாதிருக்க உப்பும்,உரப்பும்,காரமும்,வாசனை பொருட்களையும் சேர்த்து ,அழுகிய உடல் மேலும் அழுகாதிருக்க மசாலா தினுசுகள் சேர்த்து, உண்டு நீங்கள் அடைவதென்ன ? அஜீரணம்,வாயு உபத்திரவம்,அல்சர்,ரத்தக்கொதிப்பு,பைல்ஸ்,கொலஸ்ட்ரால்,மாரடப்பு இவைதானே !
பிணம் தின்னுவதேன் ! பிணமாய் மாறுவதேன் !!

RTS Perm Link


One Response  
 • ashok writes:
  March 31st, 20094:42 amat

  ennada mairaandi…tamil ki vandutiya…idhu yaarukkaga..

  ekanu tamil pesa teriyum, koncham koncham padikkateriyum…

  vunku ella mozli teriyum ani kaatradu kkaaga nee ippudi eliditiyaa???

  telugula eludu raa kaattu mairaandi….


Leave a Reply

XHTML: You can use these tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

»  Substance:WordPress   »  Style:Ahren Ahimsa

RTSMirror Powered by JalleDa