சி.கே.பாபுவை சந்தித்தேன்
கட்டமஞ்சி ,குழந்தேஸ்வரர் கோவிலை அடுத்துள்ளது சி.கே. வீடு. தோட்டம். தோட்டத்தில் பார்வையாளர்கள் காத்திருக்க கார்டன் ரெஸ்டாரன்ட் பாணியில் குடை,குடையின் கீழ் கிரானைட் கற்களால் ஆன இருக்கை. நாங்கள் உள்ளே நுழைகிறோம். சி.கே.வீட்டிலிருந்து வெளியே வருகிறார். ஸ்டோன் வாழ் பேண்ட், முழுக்கை காட்டன் சட்டை ( இது நடந்தது 2004 ல் / இப்போது அவருக்கு 54 வயது.. அப்போ 50 ஆ) .
தோட்டத்துக்கு தண்ணீர் பாய்ச்சிக்கொண்டிருந்தவர்களுக்கு ஏதோ சொல்கிறார். பிறகு “ஆந்திரபிரபா காரர்கள் யாராவது வந்தாங்களா” என்று கேட்டார். உடனே முன்னேறி..”வந்திருக்கம் சார்!” என்றேன். லோக்கல் ஆசாமி என்ற முறையில் நானே எங்கள் மேனேஜர்களை அறிமுகம் செய்தேன். சிமெண்ட் குடையை நோக்கி நடந்தார். தொடர்ந்தோம். உட்கார சொன்னார். உட்கார்ந்தோம். விஷயத்தை சொன்னோம். பொய்புகார் கொடுத்தவன் பெயரை கேட்டதுமே, அவனது செல்லப்பெயரை குறிப்பிட்டு “அவர் தானே” என்றார்.
அந்த ஆசாமியுடன் 5 வருடம் பழகினேன். அவன் செல்லப்பெயர் எனக்கு கூட தெரியாது. சி.கே. சொல்கிறார். அவர் ஏன் எம்.எல்.ஏ ஆகமாட்டார். பிறகு அவர் சொன்னதை முடிந்தவரை ஜீவன் கெடாது தமிழ்படுத்துகிறேன்.
” கேசப்பா (சி.ஐ) தானே , வீட்டுக்கு கான்ஸ்டபிளை அனுப்பிச்சாரா ..சரி சரி.. நீங்க ஒன்னும் பயப்பட வேணாம். நேரா ஸ்டேஷனுக்கு போங்க. சி.கே.பாபுகிட்டே பேசிட்டு வந்தோம்னு சொல்லுங்க. போதும். அந்த ஆளை பத்தி (சி.ஐ) இவ்ளோ இருக்கு.(இரண்டு கைகளை விரித்து) ,எல்லாம் எனக்கு தெரியும். எனக்கு தெரியும்னு அந்தாளுக்கு தெரியும். ஒன்னும் பயப்படாதீங்க. நான் தேவைன்னா என் செல்லுக்கு போன் பண்ணுங்க ..நானே வர்ரேன்”
இவ்வளவுதான் பேச்சே.. ! நேரே ஸ்டேஷனுக்கு போனோம். சி.கே.சொன்னதை சொன்னபடி (இவ்ள தெரியும் எட்ஸெட்ரா பகுதியை அல்ல) சொன்னோம். சீனே மாறிவிட்டது.
இதே போல உதவி கேட்டு சித்தூர் தெ.தேசம் தலைவர்களிடம் போனால் என்னாகும்னு இன்னொரு பதிவுல சொல்றேன்.