என் உழைப்பை உறிஞ்சி ,என்னை கொத்தடிமையாக்கி ,என் ஜனநாயக உரிமையை,தன்மானத்தை பறிக்க பார்த்த ஒரு சக பத்திரிக்கை நிருபன் மகாத்மா காந்திக்கு சற்றும் குறையாத இமேஜ் (உயர்வு நவிற்சி அணி சார்!) கொண்ட என் மேல் கிரைம் போலீசாருக்கு புகார் கொடுத்தான். அந்த புகாரை கையில் வாங்கியதோடு, என் வீட்டுக்கு ஹெட் கான்ஸ்டபிளையும் அனுப்பிவிட்டார் க்ரைம் சி.ஐ, இத்தனைக்கு நடந்தது இதுதான்: என் மீது புகார் கொடுத்தவன் பெரிய டுபாகூர் பார்ட்டி. ஒவ்வொரு பத்திரிக்கையிலும் சில காலம் வேலை செய்ய வேண்டியது,லட்சக் கணக்கில் கையாட வேண்டியது பிறகு நிர்வாகத்தின் மீதே காவல்துறையில் புகார் கொடுக்க வேண்டியது , பின் மற்றொரு பத்திரிக்கையில் சேரவேண்டியது இது தான் அவன் வேலை.
ஈதிப்படியிருக்க அவன் என் க்ளையண்டாகி ஜோதிட ஆலோசனை பெறுவது வழக்க மாயிற்று. ஒரு தினம் தனக்கு வெளிவேலைகள் அதிகம் இருப்பதால் ஆந்திரபிரபா ஆஃபீசில் சும்மா உட்கார ஒரு உதவியாளர் தேவை என்றும், மாதா மாதம் சம்பளம் தான் கொடுப்பதாகவும் கூறினான். எனக்கு ஏற்கெனவே எழுத்தில் ஆர்வம் அதிகம். நானே வருகிறேன் என்று ஒப்புக்கொண்டேன்.
அவனே எனக்கு ஆந்திர பிரபாவில் நிருபனாக சேர்த்து விட்டான். என்னை பிரஸ் க்ளப்பில் உறுப்பினனாக்கினான். அரசு அடையாள அட்டை வாங்கி கொடுத்தான்.சம்பளம் தான் கொடுக்க வில்லை.
அப்போது நான் ஒரு அன்றாடங்காய்ச்சி .கவுரவமாக பிரெட் ஹண்டர் என்று சொல்லிக் கொள்வது வழக்கம். இந்நிலையில் என் கைப்பணத்தை செலவழித்து செய்தி சேகரித்து,ஃபாக்ஸ் செய்து என் அரிப்பை தீர்த்து வந்தேன்.
பிரஸ் க்ளப்பில் தேர்தல் வந்தது. நான் யாருக்கு ஓட்டு போட வேண்டும் என்று அவன் முடிவு செய்ய பார்த்தான். நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம் என்பது நம்ம ஸ்டைலாச்சே! போடாங்.. என்று விட்டு அன்றைய செய்திகளை ஃபாக்ஸ் அனுப்பும்போது நடந்த கதையையும் ஃபாக்ஸ் செய்தேன். என்னை வேலைல வச்சது ஆச்சாரி,ஆச்சாரிக்கும் எனக்கும் பல்ப் மாட்டிக்கிச்சு..குட் பை என்பது அதன் சாராம்சம். நான் இனி நிருபனா இல்லையா ..டிசைட் பண்ணுங்க என்பது முத்தாய்ப்பு.
உடனே ஆந்திரபிரபாலருந்து அதே ஃபேக்ஸ் நம்பருக்கு போன்..” போயா கூமுட்டை! நீ தான் எங்க ரிப்போர்ட்டர். ஆச்சாரி ரிப்போர்ட்டரா இல்லையானு நாங்க வந்து டிசைட் பண்றொம்” என்றார் மேனேஜர். ஒரு சுபயோக சுபதினத்தில் வந்து இனி ஆச்சாரி ஆந்திரபிரபாவுக்கு தேவையில்லை. உன்னால விளம்பர வருமானத்துல ஒரு கம்ப்யூட்டர் ஆப்பரேட்டரை வச்சு, வாடகை கட்டி,கரண்ட் பில் கட்டி,போன் பில் கட்டி
ஆஃபீஸை மெயின்டெயின் பண்ண முடியுமா என்று கேட்டார். வரும் வருமானம் என் சம்பளத்துக்கு எட்டுமா என்பதே சந்தேகம். எனவே.. எனக்கு ஆஃபீசே தேவையில்லை சார். பிரஸ் க்ளப்லயே நியூஸ் எழுதி ஃபேக்ஸ் வச்சுர்ரன் என்றேன். அவர் ஒப்புக்கொண்டார்.
உரிய வகையில் பி.சி.சென்டர் இன்சார்ஜ் ஆகிய எனக்கு ஒரு கடிதம் கொடுத்து விட்டுப் பத்திரிக்கை நிறுவனத்தின் கம்ப்யூட்டர் இத்யாதிகளை,அந்த நிறுவனத்தின் மேலாளர் எடுத்துச்சென்றார்.
தகவலறிந்த ஆச்சாரி நான் சட்ட விரோதமாக பூட்டை உடைத்து,அவன் ட்ராயரில் வைத்திருந்த தங்க பிஸ்கட்டு,ஆப்ரிக்க வைரங்களை (உ.ந.அணி சார்) கொள்ளையடித்து விட்டதாய் புகார் கொடுத்தான்.
அப்போது தெலுங்கு தேசம் தான் ஆளுங்கட்சி. அக்கட்சி பிரமுகர்கள் அனைவரும் ஆச்சாரிக்கு வேண்டப்பட்டவர்கள். இந்த சந்தர்ப்பத்தில் தான் மாற்றி யோசித்து சித்தூர் எம்.எல்.ஏ. சி.கே.பாபுவின் உதவியை நாட முடிவு செய்தேன். சந்தித்தேன். அந்த அனுபவங்கள் அடுத்த பதிவில்