FireStats error : FireStats: Unknown commit strategy



 23 Feb 2008 @ 6:13 AM 

சித்தூர் கங்கை ஜாத்திரையின் போது பரம்பரை தர்மகர்த்தாவான சி.கே.பாபு பொன்னியம்மன் கோவிலுக்கு தேர் ஒன்றை நன்கொடையாக வழங்கும் காட்சி.

ஆனால் சி.கே.பாபுவை விமர்சிக்கும் நபர்களின் சாதனைகள் ஒன்றல்ல இரண்டல்ல. தெ.தே.பிரமுகரும், ஏ ஒன் காண்ட்ராக்டருமான ஜங்கால பல்லி சீனிவாசுலு நகராட்சிக்கு பாதாள சாக்கடை அமைக்கும் பணியை (பைசாவுக்கு தான் )ராமர் கோவில் வாகனமண்டபம் இடிந்து விழுந்தது. வாகன‌ங்கள் நாசம். இப்போது புதிதாக கட்டுகிறார்கள். கோவில் நிர்வாகம் சார்பில் தான். கட்டியது வாகன மண்டபம் அல்ல. ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ். இந்த கடைகள் யாருக்கு? “நம்மவர்களுக்கு தான்” அட தேவுடா! யார் யாரை விமர்சிப்பது?

RTS Perm Link

Posted By: chittoor Murugeshan
Last Edit: 23 Feb 2008 @ 06:13 AM

EmailPermalinkComments (0)
Tags
Categories: politics
 20 Feb 2008 @ 8:57 AM 

திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பூமண கருணாகர ரெட்டி என் போன் ஃப்ரண்ட் என்றால் அவரே கூட ஒப்புக்கொள்ளாது போகலாம். ஆனால் இது உண்மை.

வார்த்தா தெலுங்கு தினசரியில் என்னைப்பற்றி அரைப் பக்க அளவில் செய்தி வெளி வந்தது. எல்லாம் ஆப்பரேஷன் இந்தியா 2000 பற்றித்தான். அப்போது கருணாகர் ரெட்டி ப்ரதேஷ் காங்கிரஸ் காரிய கமிட்டி மெம்பர் . என்னைப்பற்றிய செய்தியை படித்து விட்டு தமது நண்பர்களிடம் என்னைப்பற்றி புகழ்ந்து பேசியது பொது நண்பர்கள் மூலம் என் காதுக்கு வந்தது.

ஆப்பரேஷன் இந்தியா 2000 விஷயத்தில் யார் உதவுவார்கள் என்று காத்திருந்த நேரம் அது. எனவே உடனடியாக டெலிபோன் டைரக்டரியில் அவர் விலாசம் போன் நெம்பர்களை பிடித்து கூரியரில் ஆப்பரேஷன் இந்தியா 2000 திட்டம், அது குறித்த என் முயற்சிகள் , தெ.தேசம் அரசின் அலட்சியம் யாவற்றையும் விவரித்து அனுப்பி வைத்து லேண்ட் லைனுக்கு போன் போட்டேன். ரொம்ப பாசிட்டிவாக ரெஸ்பாண்ட் ஆனார்.

ஆப்பரேஷன் இந்தியா 2000 பற்றி ஒரு ஜாயிண்ட் பிரஸ் மீட் போடலாமா என்று கேட்டேன். அதற்கு அவர் ஆப்பரேஷன் இந்தியா 2000 விஷயத்தில் சந்திரபாபுவைத் தான் நாம் கார்னர் செய்ய வேண்டும். இதை நான் செய்வதை விட சந்திரபாபுவுக்கு சமமான ஹோதா உள்ள டாக்டர் . ஒய்.எஸ் (இன்னாள் முதல்வர்)ரெஸ்பாண்ட் ஆகுமாறு செய்யலாம் என்றெல்லாம் கூறினார்.அதிலிருந்து போன் போட்டால் அவரே லைனுக்கு வருவார். பாத்ரூமில் இருக்கும் போது கூட போன் எடுத்து பேசியதுண்டு. ஹும் ! இதெல்லாம் ஒருகாலம்.

அவுசாரி என் மீது புகார் கொடுத்து ஹெட் கான்ஸ்டபிள் வீட்டுக்கு வந்ததும் நான் கருணாகர ரெட்டிக்கு போன் போட்டேன். அவர் “சரி சரி நீ போனை வச்சுரு” என்றார். எனக்கு பக் என்று ஆகிவிட்டது. என்னாடா இது மனுசன் கழட்டி விடறான் என்று நொந்து விட்டேன். பின் சேர்க்கையாக ” நீ போனை வச்சுட்டா நான் C.K.பாபுவுக்கு போன் போட்டு என்டார்ஸ் பண்றேன்” என்றார்.

“சார்.. எந்த பாபுவ சொல்றிங்க”
” சி.கே.வைத்தான்பா”
” சார்.. நான் என்.டி.ஆர், ஃபேன்..சி.கே.வோட‌ அர‌சிய‌ல் எதிரிக‌ள் எல்லாம் என் ந‌ண்ப‌ர்க‌ள்.. இது ச‌ரியா வ‌ருமா?”

” அட‌ட‌… நீ போனை வைப்பா ..நான் பாபுவுக்கு சொல்றேன் .. நீ பாபுவை போய் பார்”

உள்ளூற‌ உத‌ற‌ல் தான். சி.கே.பாபு அப்போதும் எம்.எல்.ஏ தான், என்ன‌ ஒரு ச‌ங்க‌ட‌ம் என்றால் எதிர்க‌ட்சி, ச‌மீப‌த்தில் தான் கொலை வ‌ழ‌க்கு,க‌ட‌ப்பா சிறை வாச‌ம் எல்லாம் ந‌ட‌ந்திருந்த‌து.. இந்த‌ மாதிரி ச‌ம‌ய‌த்தில் ஊர் விவ‌கார‌த்தில் யாராவ‌து உத‌வுவார்க‌ளா என்றும் ச‌ந்தேக‌ம்.

இருந்தாலும் உட‌னே எங்க‌ள் ஆந்திர‌பிர‌பா மேனேஜ‌ர் மோக‌னுக்கு போன் போட்டு விஷ‌ய‌த்தை சொன்னேன். எங்க‌ள் எம்.டி.யும் காங்கிர‌ஸ் கார‌ர்தான். த‌ற்ச‌ம‌ய‌ம் காங்கிர‌ஸ் எம்.எல்.ஏ வாக‌வும் இருக்கிறார். என‌வே அவ‌ர் திருப்ப‌தியிலிருந்து ச‌ரியாக‌ ஒன்ன‌ரை ம‌ணி நேர‌த்தில் க‌ட்ட‌ம‌ஞ்சியில் வ‌ந்து இற‌ங்கினார் எங்க‌ள் மேனேஜ‌ர். நேரே சி.கே.பாபு வீட்டுக்கு போனோம்.

(மீதி அடுத்த‌ ப‌திவில்)

RTS Perm Link

Posted By: chittoor Murugeshan
Last Edit: 20 Feb 2008 @ 08:57 AM

EmailPermalinkComments (0)
Tags
Categories: politics
 19 Feb 2008 @ 3:35 AM 

என் உழைப்பை உறிஞ்சி ,என்னை கொத்தடிமையாக்கி ,என் ஜனநாயக உரிமையை,தன்மானத்தை பறிக்க பார்த்த ஒரு சக பத்திரிக்கை நிருபன் மகாத்மா காந்திக்கு சற்றும் குறையாத இமேஜ் (உயர்வு நவிற்சி அணி சார்!) ‌கொண்ட என் மேல் கிரைம் போலீசாருக்கு புகார் கொடுத்தான். அந்த புகாரை கையில் வாங்கிய‌தோடு, என் வீட்டுக்கு ஹெட் கான்ஸ்டபிளையும் அனுப்பிவிட்டார் க்ரைம் சி.ஐ, இத்த‌னைக்கு ந‌ட‌ந்த‌து இதுதான்: என் மீது புகார் கொடுத்தவன் பெரிய டுபாகூர் பார்ட்டி. ஒவ்வொரு பத்திரிக்கையிலும் சில காலம் வேலை செய்ய வேண்டியது,லட்சக் கணக்கில் கையாட வேண்டியது பிறகு நிர்வாகத்தின் மீதே காவல்துறையில் புகார் கொடுக்க வேண்டியது , பின் மற்றொரு பத்திரிக்கையில் சேரவேண்டியது இது தான் அவன் வேலை.

ஈதிப்படியிருக்க அவன் என் க்ளையண்டாகி ஜோதிட ஆலோசனை பெறுவது வழக்க மாயிற்று. ஒரு தினம் தனக்கு வெளிவேலைகள் அதிகம் இருப்பதால் ஆந்திரபிரபா ஆஃபீசில் சும்மா உட்கார ஒரு உதவியாளர் தேவை என்றும், மாதா மாதம் சம்பளம் தான் கொடுப்பதாகவும் கூறினான். எனக்கு ஏற்கெனவே எழுத்தில் ஆர்வம் அதிகம். நானே வருகிறேன் என்று ஒப்புக்கொண்டேன்.

அவ‌னே எனக்கு ஆந்திர பிரபாவில் நிருபனாக சேர்த்து விட்டான். என்னை பிர‌ஸ் க்ள‌ப்பில் உறுப்பின‌னாக்கினான். அர‌சு அடையாள‌ அட்டை வாங்கி கொடுத்தான்.ச‌ம்ப‌ள‌ம் தான் கொடுக்க‌ வில்லை.
அப்போது நான் ஒரு அன்றாட‌ங்காய்ச்சி .கவுரவமாக பிரெட் ஹண்டர் என்று சொல்லிக் கொள்வது வழக்கம். இந்நிலையில் என் கைப்ப‌ண‌த்தை செல‌வ‌ழித்து செய்தி சேக‌ரித்து,ஃபாக்ஸ் செய்து என் அரிப்பை தீர்த்து வ‌ந்தேன்.

பிர‌ஸ் க்ள‌ப்பில் தேர்த‌ல் வ‌ந்த‌து. நான் யாருக்கு ஓட்டு போட‌ வேண்டும் என்று அவ‌ன் முடிவு செய்ய‌ பார்த்தான். நாமார்க்கும் குடிய‌ல்லோம் ந‌ம‌னை அஞ்சோம் என்ப‌து ந‌ம்ம‌ ஸ்டைலாச்சே! போடாங்.. என்று விட்டு அன்றைய‌ செய்திக‌ளை ஃபாக்ஸ் அனுப்பும்போது ந‌ட‌ந்த‌ க‌தையையும் ஃபாக்ஸ் செய்தேன். என்னை வேலைல‌ வ‌‌ச்ச‌து ஆச்சாரி,ஆச்சாரிக்கும் என‌க்கும் ப‌ல்ப் மாட்டிக்கிச்சு..குட் பை என்ப‌து அத‌ன் சாராம்ச‌ம். நான் இனி நிருப‌னா இல்லையா ..டிசைட் ப‌ண்ணுங்க‌ என்ப‌து முத்தாய்ப்பு.
உட‌னே ஆந்திர‌பிர‌பால‌ருந்து அதே ஃபேக்ஸ் நம்பருக்கு போன்..” போயா கூமுட்டை! நீ தான் எங்க‌ ரிப்போர்ட்ட‌ர். ஆச்சாரி ரிப்போர்ட்ட‌ரா இல்லையானு நாங்க‌ வ‌ந்து டிசைட் பண்றொம்” என்றார் மேனேஜ‌ர். ஒரு சுப‌யோக‌ சுப‌தின‌த்தில் வ‌ந்து இனி ஆச்சாரி ஆந்திரபிரபாவுக்கு தேவையில்லை. உன்னால விளம்பர வருமானத்துல ஒரு க‌ம்ப்யூட்ட‌ர் ஆப்ப‌ரேட்ட‌ரை வ‌ச்சு, வாட‌கை க‌ட்டி,க‌ர‌ண்ட் பில் க‌ட்டி,போன் பில் க‌ட்டி

ஆஃபீஸை மெயின்டெயின் ப‌ண்ண‌ முடியுமா என்று கேட்டார். வ‌ரும் வ‌ருமான‌ம் என் ச‌ம்ப‌ள‌த்துக்கு எட்டுமா என்ப‌தே ச‌ந்தேக‌ம். என‌வே.. என‌க்கு ஆஃபீசே தேவையில்லை சார். பிர‌ஸ் க்ள‌ப்ல‌யே நியூஸ் எழுதி ஃபேக்ஸ் வ‌ச்சுர்ர‌ன் என்றேன். அவ‌ர் ஒப்புக்கொண்டார்.

உரிய‌ வ‌கையில் பி.சி.சென்ட‌ர் இன்சார்ஜ் ஆகிய‌ என‌க்கு ஒரு க‌டித‌ம் கொடுத்து விட்டுப் பத்திரிக்கை நிறுவனத்தின் கம்ப்யூட்டர் இத்யாதிகளை,அந்த நிறுவனத்தின் மேலாளர் எடுத்துச்சென்றார்.

த‌க‌வ‌ல‌றிந்த‌ ஆச்சாரி நான் ச‌ட்ட‌ விரோத‌மாக‌ பூட்டை உடைத்து,அவ‌ன் ட்ராய‌ரில் வைத்திருந்த‌ த‌ங்க‌ பிஸ்க‌ட்டு,ஆப்ரிக்க‌ வைர‌ங்க‌ளை (உ.ந‌.அணி சார்) கொள்ளைய‌டித்து விட்ட‌தாய் புகார் கொடுத்தான்.

அப்போது தெலுங்கு தேச‌ம் தான் ஆளுங்க‌ட்சி. அக்க‌ட்சி பிர‌முக‌ர்கள் அனைவ‌ரும் ஆச்சாரிக்கு வேண்ட‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ள். இந்த‌ ச‌ந்த‌ர்ப்ப‌த்தில் தான் மாற்றி யோசித்து சித்தூர் எம்.எல்.ஏ. சி.கே.பாபுவின் உத‌வியை நாட‌ முடிவு செய்தேன். ச‌ந்தித்தேன். அந்த‌ அனுப‌வ‌ங்க‌ள் அடுத்த‌ ப‌திவில்

RTS Perm Link

Posted By: chittoor Murugeshan
Last Edit: 19 Feb 2008 @ 03:35 AM

EmailPermalinkComments (0)
Tags
Categories: politics

 Last 50 Posts
 Back
Change Theme...
  • Users » 3443
  • Posts/Pages » 460
  • Comments » 765
Change Theme...
  • VoidVoid « Default
  • LifeLife
  • EarthEarth
  • WindWind
  • WaterWater
  • FireFire
  • LightLight

ABOUT ME



    No Child Pages.